வேட்டை மன்னன் உரிமையை வாங்கிய ஜி தமிழ்!!!

Monday, March 19, 2012
போடா போடி, வேட்டை மன்னன் இரண்டில் எந்தப் படப்பிடிப்பில் சிம்பு இருக்கிறார், இருப்பார் என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தெரியுமா என்பதே சந்தேகம். இந்த வார அதிர்ஷ்டம் வேட்டை மன்னனுக்கு. இதன் படப்பிடிப்பில்தான் சிம்பு கலந்து கொள்கிறார்.

சனிக்கிழமை வேட்டை மன்னன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டன. ஜெய், கணேஷ் ஆஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். வரும் 21 ஆம் தேதிவரை சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். முக்கியமாக இன்று ஹன்சிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதாக இருந்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்றைய படப்பிடிப்பு நடப்பதற்கான வாய்ப்பில்லை. சிம்புவின் மனம் மாறாமலிருந்தால் நாளை படப்பிடிப்பு நடக்க வாய்ப்பிருக்கிறது.

சிம்பு மீது யார் சேறு வாரி அடித்தாலும் அவரின் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. வேட்டை மன்னனின் படப்பிடிப்பே முடியாத நிலையில் அதன் ஒளிபரப்பு உரிமையை லம்பாக ஒரு தொகைக்கு ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.

Comments