
சென்னை::சங்கரன்கோவில் : திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு இன்று தீவிர பிரசாரம் செய்கிறார். சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து நடிகை குஷ்பு இன்று மாலை 6 மணிக்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியம் தேவர்குளத்தில் பிரசாரத்தை துவக்குகிறார். அங்கிருந்து வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணி முதல் சங்கரன்கோவில் நகராட்சி பகுதி களான தேரடித் திடல், கழுகு மலை ரோடு, கக்கன்நகர், திருவேங்கடம் சாலை, திருவள்ளுவர் சாலை மெயின்ரோடு, பஸ் நிலையம் முன்பு, வடக்கு ரத வீதி ஆகிய இடங்களிலும் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.
Comments
Post a Comment