
சென்னை::* சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் துபாயில் பெண்கள் குழந்தைகள் நல அமைப்புக்கு சென்றபோது அவர்களுக்கு விருந்தளித்து விருது பெற்றதற்கு விழா கொண்டாடினார்.
* கே.வி.ஆனந்தின் புதிய ஸ்கிரிப்ட் கேட்ட ரஜினிக்கு பிடித்துவிட அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந்த் இதை உறுதி செய்யவில்லை.
* தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்க அனுஷ்கா, காஜல் அகர்வாலுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
* முப்பரிமாணத்தில் உருவாகும் ‘ரெமோ’ என்ற இசை ஆல்பத்தில் நடனம் ஆடுவதற்காக 6 கிலோ எடை குறைத்திருக்கிறார் பிரபுதேவா.
* செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இரு வேடத்தில் நடிக்கிறார் ஆர்யா.
Comments
Post a Comment