கண்டிஷன் போடும் ஹீரோ!!!

Wednesday,March,21,2012
சம்பளம் தவிர, பட லாபத்துல பங்கு, டப்பிங் ரைட்ஸ்னு இப்போவே உச்ச நடிகரு ரேஞ்சுல பிரகாச நடிகரு பிகு பண்றாராம்... பண்றாராம்... இதுல எல்லாம் இணக்கமா போற தயாரிப்புக்குதான் கால்ஷீட்டுன்னு கண்டிஷனும் போடுறாராம்... போடுறாராம்... இதனால இடையில சில வாய்ப்புகளும் பறிபோனதாம். அதனாலதான் மத்த தயாரிப்புகளுக்கு பதில், தன்னோட சொந்த கம்பெனி படங்கள்லேயே அடிக்கடி நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்...

இந்தியில ரெண்டு முறை கையை சுட்டுக்கிட்டாரு கவுதம இயக்கம். இருந்தாலும் பாலிவுட் ஆசை போகலையாம்... போகலையாம்... மூணு மொழியில படம் எடுக்கிறாரு. இதை இந்தியில வாங்க வினியோகஸ்தருங்க தயங்குறாங்களாம்... தயங்குறாங்களாம்... பேசாம இந்தி ரீமேக்கை மட்டும் கைவிட்டுவிடலாம்னு பைனான்ஸ் பண்றவரு அட்வைஸ் பண்ணினாராம். Ôமுடியாது. இந்தியில நான் ஜெயிச்சி காட்டுறேன் பாருங்க. எப்படியும் படத்தை விக்கலாம்னு இயக்கம் பிடிவாதம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...

நீண்ட காலமா காதல் நடிகருக்கு கைகொடுக்கிற மாதிரி படங்கள் எதுவும் வரல. நடிச்சிருந்த சில படங்களும் பாதியில நின்னு போச்சு. இதனால நடிகரு வருத்தமா இருக்காராம்... இருக்காராம்... வீட்ல பெண் பார்க்கிற படலம் நடந்துச்சாம். ஆனா நடிகரு, இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு மனசு உடைஞ்சு சொல்றாராம்... சொல்றாராம்... ஒரு ஹிட் கொடுத்திட்டு கல்யாணம் பண்ணலாம்னு நடிகரு யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

Comments