Thursday, March 08, 2012
சென்னை::கோச்சடையானுக்காக விரைவில் ரஜினி லண்டன் செல்கிறார் என்று தெரிவித்திருந்தோம். இப்போது இன்னொரு தகவல், கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் பிமாண்டப் படம். ரஜினியுடன் ஆதி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராஃப்பும் முக்கிய வேடத்தில் இடம்பெறுகிறார். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
கோச்சடையான் பட வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மார்ச் 15 முதல் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாகவும் பிஆர்ஓ ரியாஸ் கோச்சடையான் தயாரிப்பாளர் சார்பில் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment