சிறுவயதில் குண்டாக இருந்த என்னை யாரும் திரும்பி பார்க்கவில்லை, தாமதமாகத்தான் ஆண்கள் என்னை சைட் அடித்தார்கள் - சமீரா ரெட்டி!!!

Saturday, March, 31, 2012
சிறுவயதில் குண்டாக இருந்த என்னை யாரும் திரும்பி பார்க்கவில்லை. தாமதமாகத்தான் ஆண்கள் என்னை சைட் அடித்தார்கள் என சமீரா ரெட்டி கூறினார். வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: எனக்கு 19 வயது இருந்தபோது உடல் எடை 105 கிலோ. குண்டாக உடல் பெருத்து பார்ப்பதற்கே ஒரு ஷேப் இல்லாமல் இருந்தேன். என்னை கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இதனால் வெளியில் செல்வதே எனக்கு சோதனையாக இருக்கும். என் தங்கை மேக்னா ஒல்லியாக, அழகாக இருப்பாள். அவளிடம் பேசுபவர்கள் என்னிடம் பேச மாட்டார்கள். அவளது இடுப்பளவு 22 இன்ச். எனக்கு டவுள் சைஸ். கல்லூரி நாட்களில் இந்த வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறேன். போராட்டமே எனது வாழ்க்கையாகி விட்டது. இந்த போராட்டத்தை நடிகைகள் மட்டுமல்ல, குடும்ப பெண்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகள்போல் அவர்களும் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களது கணவன்மார்கள் விரும்புகிறார்கள்.

அப்போதெல்லாம் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு இட்லிதான் சாப்பிடுவேன். இதனால் மயக்கம் அடைந்து விழுந்ததுதான் மிச்சம். இதைப்பார்த்து கோபம் அடைந்த அம்மா, ‘இந்த முட்டாள்
தனத்தை கைவிடாவிட்டால் வீட்டிலேயே பூட்டி வைத்துவிடுவேன் என்றார். பிறகுதான் உணவு என்பது உடல் எடைக்கு எதிரி அல்ல என்பதை புரிந்துகொண்டேன். முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டேன். யோகாசனம், உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தேன். நடிகையானபிறகு எனது பள்ளி, கல்லூரி தோழிகள் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ‘நீ புதுபிறவி எடுத்ததுபோல் இருக்கிறது’ என்றார்கள். என்னை கண்டாலே கிண்டல் செய்த ஆண்களும் காலதாமதமாகவே என்னை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

Comments