அஜித் படத்திற்கு நயன்தாரா போட்ட நிபந்தனை!!!

Sunday, March 04, 2012
வருகிற ஏப்ரல் மாதம் முழுக்க சென்னையிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டிருக்கிறாராம் நயன்தாரா. இங்கிருந்து கொண்டுதான் எல்லாவற்றையும் ஆபரேட் செய்யப் போகிறார் அவர். அஜித் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கமிட் ஆகிவிட்டார் என்ற தகவலிலும் உண்மையில்லையாம். ஐயய்யோ... அப்புறம்? இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகிய தயாரிப்பு தரப்பிடம் நயன்தாரா போட்ட ஒரே நிபந்தனை இதுதான். அஜித்துடன் நடிக்க எனக்கு விருப்பம்தான். அதற்காக நீங்க கேட்கிற தேதியை அப்படியே மாதக்கணக்கில் என்னால கொடுக்க முடியாது. அவர் இந்த படத்திற்காக என்ன தேதி கொடுத்திருக்கிறார் என்று முதலில் சொல்லுங்க. அதுக்கேற்ற மாதிரி என் தேதிகளை ஒதுக்குகிறேன் என்றாராம். அலசி பிழிந்து கொண்டிருக்கிறார்கள். தேதிகள் திருப்தியானால் மட்டுமே அஜித் படத்தில் நடிப்பார் நயன்தாரா. அடேங்கப்பா.... ஓரமா கெடந்த ஒட்டடைக்குச்சி ஓவராத்தான் அலம்புது.....

Comments