சினிமா காதலில் விழுந்தேன் பட டைரக்டர் நண்பருடன் கைது!!!

Saturday, March 10, 2012
படம் தயாரிக்க ரூ.67 லட்சம் பணத்தை தயாரிப்பாளரிடம் வாங்கி மோசடி செய்த சன்பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் பட டைரக்டர் பி.வி.பிரசாத் மற்றும் அவருடன் கூட்டுசேர்ந்து படதயாரிப்பாளரை ஏமாற்றிய மற்றொரு டைரக்டர் மாசி மற்றும் தீ படத்தை டைரக்ட் செய்த கிச்சா என்பவரும் மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இதுபற்றிய விபரம் வருமாறு; கோலங்கள், சித்தி, அண்ணாமலை, சொர்க்கம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் தமிழ்குமரன். இவர் கடந்த 2009 ம் ஆண்டு சொந்தமாக திரைப்படம் தயாரிக்க எண்ணி சன் பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய டைரக்டர் பி.வி.பிரசாத் என்பவரை தனது படத்தை இயக்கும் படி அமர்த்தியுள்ளார். அதன் படி ஒப்பந்தம் போடப்பட்டு முதல்கட்டமாக தமிழ்குமரன் பி.வி.பிரசாத் வசம் ரூ.67 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். தனது படத்திற்கு காதலில் விழுந்தேன் கதாநாயகன் நகுலை கதாநாயகனாக போடும்படி கேட்டுள்ளார். அதற்க்கு ஒத்துகொண்டு பணத்தை வாங்கிய டைரக்டர் பிரசாத் படத்தை எடுக்காமல் இழுத்தடித்துள்ளார் இதுப்பற்றி தயாரிப்பாளர் கேட்ட பொழுதெல்லாம் சரியான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். ஒருக்கட்டத்தில் தனது நண்பரும் மாசி, தீ படத்தை இயக்கியவருமான கிச்சா என்பவரை காட்டி இனி இவர்தான் உங்கள் படத்தை இயக்குவார் என்று கூரியுள்ளார்.ஆனால் கிச்சாவும் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி தயாரிப்பாளர் தமிழ்குமரன் படம் பதிவு செய்யும் லேபில் விசாரித்தபோது படத்தை தமிழ்குமரன் பெயரில் பதிவு செய்யாமல் பிரசாத் பெயரில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி கேட்டு தனது பணத்தை தமிழ்குமரன் திரும்ப கேட்டபோது ரூ.50 லட்சத்திற்க்கு செக் கொடுத்துள்ளனர். பிறகு அதையும் போடவேண்டாம் என்று கேட்டுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த தயரிப்பாளர் கமிஷ்னர் திரிபாதியிடம் இதுப்பற்றி புகார் அளித்துள்ளார். புகாரை விசாரிக்க திரிபாதி உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றபிரிவு போலிசார் நேற்று இருவரையும் கைது செய்து சைதப்பேட்டை 11வது திமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர். பி.வி.பிரசாத்திடமிருந்து அவர் பயன் படுத்திய இன்னொவர் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments