லண்டனில் இசை கோர்க்கும் இளையராஜா!!!

Friday, March 23, 2012
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார்.

ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.

Comments