
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மகன் நடிக்கும் கடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையில் உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடில் முதல் காட்சி படமாக்கப்பட்டது.
மீனவர் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட கடல் முழுக்க முழுக்க காதல் கதையாகும். காதல் கதைதான் என்றாலும், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அந்நிய கடற்படையினரிடம், அந்நிய மீனவர்களிடம் சிக்கி அனுபவிக்கும் துன்பங்களை ஹைலைட்டாகச் சொல்லப் போகிறாராம் மணிரத்னம்.
அவரது இயக்கத்தில் ஒரு வெற்றிப்படம் வெளியாகி ரொம்ப நாளாகிவிட்டதால் இந்தப் படத்தை, தமிழில் மட்டுமே எடுக்கிறார். தமிழ் மீனவ கிராமங்களை அதன் இயல்புத் தன்மையுடன் காட்ட பெரும் முயற்சி மேற்கொண்டுவருகிறார். முழுக்க முழுக்க தமிழ்நாட்டு கடற்கரை லொகேஷன்களிலேயே எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
அர்ஜுன் - அரவிந்த் சாமி
ஆக்ஷன் கிங் அர்ஜூன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் அரவிந்த் சாமியும் கைகோர்க்கிறார்.
இசை ஏ ஆர் ரஹ்மான், ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன்!
Comments
Post a Comment