ரசிகர்களிடம் தப்ப முடியவில்லையே!*நடிகை ஹன்சிகா புலம்பல்!!!

Friday, March, 30, 2012
எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். ரசிகர்களிடமிருந்தும், மீடியாவினரிடமிருந்தும் தப்ப முடியவில்லையே...' என, நடிகை ஹன்சிகா கூறினார். கோவிலில் அவரைக் காண, ரசிகர்களிடையே சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்திருந்த நடிகை ஹன்சிகா, நேற்று முன்தினம் அதிகாலை கோவிலுக்குள் சென்று, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை நடிகைக்கு வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே வந்த ஹன்சிகாவை, அருகில் சென்று காண்பதற்கு அந்த அதிகாலை நேரத்திலும், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால், சில நிமிடங்கள் வரை ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதை கவனித்த நடிகை, "எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்து விட்டுத் திரும்பலாம் என நினைத்தேன். தப்ப முடியவில்லையே...' என கூறியபடி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Comments