
நிச்சயமாக இந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம், கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் தனது சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் இளைய மகள் செந்தர்யா அஸ்வின்தான் இந்த யோசனையைக் கொடுத்தவர். படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ரஜினிகாந்த்தின் குரல் சிறப்பாக எடுபடும் என்று நினைத்தவர், உடனடியாக அவரது குரலை பதிவும் செய்துவிட்டார்.
இது ஒரு சாதாரண டூயர் பாடலோ, கமர்சியல் பாடலோ அல்ல. உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளுக்கு பின்னணியாக வரும் வகையிலான பாடலாகும். இதற்கு சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் படத்தின் தென்றலோடு உடன் பிறந்தாள் பாடல் வரிகளை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, மன்னன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தனது சொந்தக் குரலில் ஒரு டூயட் சாங் பாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
Comments
Post a Comment