Wednesday,March,21,2012
இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் ஆட்டத்தை பாராட்டியுள்ள கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி. அதிரடியாக விளையாடும் இளம்வீரரான இவர், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 183 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதனயைடுத்து விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை சகவீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டினர். அதேபோல கவர்ச்சி மாடல் அழகியும், கிரிக்கெட் ரசிகையுமான பூனம் பாண்டேவும் அவரை பாராட்டி ட்விட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
என்ன அருமையான ஆட்டம் விராத். நான் உன்னை காதலிக்கிறேன். சிறப்பாக ஆடும் உங்களின் உணர்வுகளை (நான்) அதிகமாக பாராட்டுவதில்லை. ஆனால் இன்று நீங்கள் ஆடின ஆட்டம் மூலம் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எப்போது நினைவில் வைத்திருப்போம். பாகிஸ்தான் பந்துகளை துவஷம் செய்ய கோஹ்லி உள்ளார். அவர் ஒரு ரத்தினம். என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றால், முழு நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவதாக பூனம் பாண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பூனம் பாண்டே, இந்தியா கோப்பையை வென்ற போது பூசி மெழுகி, மழுப்பி கடைசி வரை நிர்வாண தரிசனம் தராமல் எஸ்கேப் ஆகி விட்டார். இருந்தாலும் தற்போது தனது இணையதளம் மூலமாக அவ்வப்போது கவர்ச்சிப் படங்களையும், வீடியோக்களையும் போட்டு தொடர்ந்து களேபரப்படுத்தி வருகிறார். தற்போது கோஹ்லியை காதலிப்பதாக கூறியுள்ளார்.

Comments
Post a Comment