ஆஸ்கர் சொன்ன அப்பட்ட பொய் - ஜாக்கிசானின் தயா‌ரிப்பு நிறுவனம் மறுப்பு!!!

Friday, March, 30, 2012
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கிசான் படங்களின் உ‌ரிமையை வாங்கி விநியோகித்ததும், அதன் காரணமாக ஜாக்கிசானுடன் தொழில்‌ ‌ரீதியாக அறிமுகம் ஏற்பட்டதும் தமிழகத்துக்கு‌த் தெ‌ரிந்த விஷயம்தான்.

இந்த நட்பை வைத்து கோடிகளை கொட்டி ஜாக்கிசானை தசாவதாரம் படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைத்து வந்தார்கள். ஐஸ்வர்யாராய்க்கு பணம் கொடுத்து தி நகர் ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்கு அழைத்து வந்த மாதி‌ரிதான் இதுவும். விழா முடிந்ததும் உறவும் ஃபணால்.

ஆனால் இது ஏதோ ரத்த பந்தம் போல ஆஸ்கர் ரவிச்சந்திரன் பேட்டியளித்ததுதான் பிரச்சனையாகியிருக்கிறது. அடுத்து தயா‌ரிக்கப் போகிற படத்தில் ஜாக்கிசான் நடிக்கிறார், கூடவே சல்மான்கான். இன்னொரு ஹீரோவாக கமலும் நடிப்பார் என கதைவிட்டிருந்தார். இதனை ஜாக்கிசானின் தயா‌ரிப்பு நிறுவனம் மறுத்திருக்கிறது. அப்படி எந்த ஐடியாவும் ஜாக்கிக்கு இல்லை என்று ஆஸ்க‌ரின் மூக்கை அறுத்திருக்கிறார்கள். தேவையா இது.

Comments