ஆச்சி வீட்டுக்கு வந்திட்டாங்க...!

Wednesday, March 28, 2012
முழங்கால் வலி பிரச்சினைக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த நடிகை மனோரமா, நேற்று வீடு திரும்பினார். நடிகை மனோரமாவுக்கு ஏற்கனவே முழங்கால் வலி காரணமாக, அவருடைய 2 கால்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் காளஹஸ்தி சென்றபோது, ஓட்டலில் இருந்த குளியல் அறையில் தவறி விழுந்தார். அதில், அவருடைய தலையில் அடிபட்டது. இதற்காக, அவருடைய தலையில் 'ஆபரேஷன்' நடைபெற்ற து. ஆபரேஷனுக்குப் பின், அவர் குணம் அடைந்தார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 8 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபின், நேற்று அவர் வீடு திரும்பினார். நல்லா ரெஸ்ட் எடுங்க ஆச்சி.....

Comments