காஜலும் நானும் எதிரும் புதிருமானவர்கள் : நிஷா அகர்வால்!!!

Saturday, March, 31, 2012
காஜலும் நானும் எதிரும் புதிருமாக பணியாற்றுபவர்கள் என்றார் நிஷா. காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். தமிழில் இஷ்டம் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். அவர் கூறியதாவது: தெலுங்கில் நான் நடித்த ஏமய்ந்தி இ வேல மற்றும் சோலோ என இரண்டு படங்களும் ஹிட். ஆனாலும் புதிய படங்கள் ஒப்புக்கொள்வதில் அவசரப்பட மாட்டேன். நல்ல ஸ்கிரிப்ட்டுக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை. நானும், காஜலும் சகோதரிகளாக இருந்தாலும் நடிப்பை பொறுத்தவரை எதிரும் புதிருமாகவே இருக்கிறோம்.

எங்களுடைய அப்ரோச் மாறுபட்டது. காஜல் மிகவும் சுறுசுறுப்பானவர், அதிக திறமை வாய்ந்தவர். நான் இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் இருவரையும் ஒப்பிடக்கூடாது. ஏமய்ந்தி.. படத்தில் நடித்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பி நடித்தேன். இதற்கிடையில் தமிழில் பெரிய படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பை என்னால் மறுக்க இயலாது. இதில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முடிவானதும் சொல்கிறேன். இவ்வாறு நிஷா அகர்வால் கூறினார்

Comments