தமிழில் மும்பை திருநங்கை!!!

Wednesday,March,21,2012
மும்பையில் வாழ்ந்துவந்த திருநங்கை தமிழ் படத்தில் நடித்தார். திருநங்கையின் காதலை மையமாக வைத்து ‘சொல்லாக் கதை என்ற படம் உருவாகிறது. இதுபற்றி பட இயக்குனர் சிவகுமார் கூறியதாவது: சமுதாயத்தாலும், பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் பற்றிய படம் ‘சொல்லாக் கதை. ஏற்கனவே ‘பால் என்ற பெயரில் உருவாகி வந்தது. இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஹீரோ சுதிரை காதலிக்கிறார் கற்பகா. ஆனால் சுதிரோ மற்றொரு நாயகி வினிதாவை காதலிக்கிறார். வினிதாவும் காதலுக்கு சம்மதிக்கிறார். கற்பகாவும் சுதிரை காதலிப்பது அறிந்து தற்கொலைக்கு முயல்கிறார் வினிதா. அதை தடுக்கும் கற்பகா தான் ஒரு திருநங்கை என்பதை சொல்லி அவரை காப்பாற்றுகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. இப்படத்தில் நடிப்பதற்காக அச்சு அசப்பில் பெண்போலவே தோன்றும் திருநங்கையை தேடினோம். பெரும்பாலும் திருநங்கை களை அவர்களது பாடி லாங்வேஜ் வைத்து அடையாளம் தெரியும். இக்கதைக்கு அதுபோல் இல்லாமல் பெண் தோற்றத்துடன் கூடிய திருநங்கை தேவைப்பட்டார். இதற்காக மும்பையிலிருந்து கற்பகா என்ற திருநங்கையை தேர்வு செய்தோம். அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தோம்.

Comments