கொந்தளிப்பை ஏற்படுத்தும் இயக்குனர்கள்!!!

Wednesday,March,21,2012
இலங்கை இருக்கிறவரை மீனவர் பிரச்சனை இருக்கும் என்றே தோன்றுகிறது. இந்நிலையில் மணியானவரும், பருவக் காற்றை இயக்கியவரும் தத்தமது படங்களுக்காக கடல் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதில் இரண்டாமவர், மீனவர்களின் நெருக்கடியைதான் எடுக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டே கடலுக்கு கேமராவுடன் சென்றிருக்கிறார். மணியானவரின் கதை காதல் என்றாலும் மீனவர் பிரச்சனையும் வருகிறதாம்.

எரிகிற பிரச்சனையை இருவரும் எப்படி அணுகப் போகிறார்கள் என்று இப்போதே கடலோரத்தில் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே ஈழத்தை எடுக்கிறேன் என்று இஷ்டத்துக்கு மணியானவர் கதைவிட்டதால் எழுந்த காய்ச்சல்தான் இது. கடலை கொந்தளிக்க வச்சிடாதீங்க பாஸ்.

Comments