Sunday, March 25, 2012
வித்யாபாலன் நடித்த Kahaani பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் எதிர்பாராத சர்ப்ரைஸ். இந்த க்ரைம் த்ரில்லர் படம் இரண்டாவது வார இறுதியில் 43.05 கோடிகளை வசூலித்துள்ளது.
கதையையும், ஸ்கிரிப்டையும் நம்பினால் பெரிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை என்பது சமீபத்திய தமிழ் உதாரணம் மௌனகுரு. இந்தியில் ககானி. வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருக்கும் இந்தப் படம் அவரின் இமேஜை அதிகரித்திருக்கிறது. இவரின் டர்ட்டி பிக்சர்ஸ், ககானி இரண்டும் சூப்பர்ஹிட். அதுவும் அடுத்தடுத்து. இரண்டுமே ஹீரோயின் ஓரியண்ட் சப்ஜெக்ட்.
கரீனா, கத்ரினாவை மறந்து விதயாபாலன் என்று முணுமுணுக்கிறது ரசிகப் பட்டாளம். முக்கியமாக அமீர்கானை இப்படத்தின் வெற்றி பாதித்திருக்கிறது. இவரின் அடுத்தப் படம் தல்லாஸும் இதேபோலொரு க்ரைம் த்ரில்லர். அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த தனது படத்தை நவம்பருக்கு அமீர் தள்ளி வைத்துள்ளார்.
அமீரையே பயப்பட வைத்த வித்யாபாலன் இந்தியில் அறிமுகமாவதற்கு முன் நடிக்கத் தெரியவில்லை என்று ஒருமுறையும், ரொம்ப சுமார் அழகி என இன்னொருமுறையும் தமிழ்த் திரையுலகால் நிராகரிக்கப்பட்டவர்.
நமிதாக்கள் கோலோச்சும் ஊரில் நடிக்கத் தெரிந்தவருக்கு என்ன வேலை.

Comments
Post a Comment