தயாரிப்பாளர் மீது புகார் ஸ்ரேயா திடீர் பல்டி!!!

Thursday, March 22, 2012
தான் நடித்த தெலுங்கு படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று புகார் கொடுத்த ஸ்ரேயா திடீரென அந்த புகாரை வாபஸ் பெற்றார்.
மலையாளத்தில் ஸ்ரேயா நடித்த போக்கரி ராஜா படத்தை தமிழில் ‘ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து ரிலீஸ் செய்ய உரிமை பெற்றார் தயாரிப்பாளர் பாண்டியன். ரிலீஸுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் தயாரிப்பாளருக்கு ஸ்ரேயா எதிர்ப்பு தெரிவித்தார். ‘மலையாளத்தில் நான் நடித்த படத்தை வேறு மொழியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டுத்தான் நடித்தேன். ஆனால் என் அனுமதி இல்லாமல் அப்படத்தை தமிழில் பாண்டியன் என்பவர் ரிலீஸ் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்தார் ஸ்ரேயா.

இந்நிலையில் தயாரிப்பாளர் பாண்டியன், ஸ்ரேயாவை நேரில் சந்தித்து பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து தான் அளித்த புகாரை வாபஸ் பெற ஸ்ரேயா முடிவு செய்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, ‘கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரேயா மற்றும் அவரது பெற்றோருடன் பேசினேன். அப்போது அவர் நடித்த படத்தை ரிலீஸ் செய்வது பற்றியும், அதில் ஏற்பட்ட குறைபாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் செய்யாவிட்டால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதை அவரிடம் கூறினேன். அதை அவர்கள் புரிந்துகொண்டனர். இதையடுத்து என் மீது தந்த புகாரை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார். இப்படத்தை விரைவில் சென்சாருக்கு திரையிட்டு, பின் இம்மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

Comments