தமிழ் ஸ்டார் இமேஜ் இந்தியில் எடுபடாது-மாதவன்!!!

Sunday, March 25, 2012
தமிழ் சினிமா ஸ்டார் இமேஜ் பாலிவுட்டில் எடுபடாது என்றார் மாதவன்.
இது பற்றி மாதவன் கூறியதாவது:
கோலிவுட் ஹீரோக்களை பாலிவுட் ரசிகர்கள் ஏற்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இது மொழி, மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. தமிழில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு ஹீரோ இந்தியிலும் அதே இமேஜுடன் நடிக்க வேண்டுமென்றால் எடுபடாது. 10 வருடத்துக்கும் மேலாக இந்தியில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நல்ல கதைகளையும், எனக்கேற்ற வேடங்களையும் ஏற்று நடிப்பதுதான். லுங்கி கட்டிக்கொண்டு பரிதாபமான காட்சியில் நடிப்பதற்கு எனது உடல்வாகோ, முகமோ பொருத்தமானதில்லை. இதை சொல்லிக்கொடுக்க எனக்கென்று யாரும் குரு கிடையாது. நானே படிப்படியாக உணர்ந்துகொண்டேன். பிறகு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்து படங்களை ஒப்புக்கொண்டேன்.ரீமேக் படங்கள் இந்தியில் இப்போது நன்றாக ஓடுகிறது. அதற்காக எல்லா படங்களையும் அப்படி செய்துவிட முடியாது. தமிழில் வெளியான ‘விண்ணை தாண்டி வருவாயாÕ படம் இந்தியில் ‘ஏக் தீவானா தா‘ என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் அது எடுபடவில்லை. ஆக்ஷன் படங்கள் கடந்த சில வருடங்களாக இந்தியில் உருவாகாமல் இருந்தது. அது ரீமேக் என்ற வகையில் உருவானபோது வெற்றி பெற்றது.

Comments