
தனது ஸ்டில்களை வெளியிட்டதற்காக ஆண்ட்ரியா சண்டை போட்டாரா என்றதற்கு பெண் இயக்குனர் பதில் அளித்தார்.
தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம் படத்தை இயக்கிய சாரதா ராமநாதன், அடுத்து ‘புதிய திருப்பங்கள் என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது:
ஆண் இயக்குனர்களுக்கு நிகராக கமர்ஷியல் படங்களை பெண்களால் இயக்க முடியாது என்கிறார்கள். அதை ஏற்க முடியாது. ‘புதிய திருப்பங்கள் படம் இளம்பெண்கள் கடத்தல் பற்றிய கதை. நந்தா ஹீரோ. ஆண்ட்ரியா ஹீரோயின். தாரணி என்ற சிறுமியும் நடித்திருக்கிறார். இசை வித்யாசாகர். ஒளிப்பதிவு மது அம்பாட். ஆண்ட்ரி யாவிடம் அனுமதி பெறாமல் அவரது ஸ்டில்கள் வெளியிட்டதால் என்னுடன் அவர் சண்டை போட்டாரா? என கேட்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஷூட்டிங்கில் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு பாடலும் பாடி இருக்கிறார். சில காட்சிகளில் யோசனைகள் சொல்லி வேலையை எளிதாக்கினார்.
இப்படத்திற்காக இளம்பெண்கள் கடத்தல் பற்றி ஆய்வு நடத்தினேன் கடத்தல் குற்றவாளிகளை ஜெயிலில் பேட்டி எடுத்தேன். இச்சம்பவத்துக்கு பின்னால் குண்டர்கள் மட்டுமல்ல பெரும் புள்ளிகள் இருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடத்தப்பட்ட பெண் ஒருவரிடமும் கருத்து கேட்டேன். பாலியல் பலாத்காரத்துக்காக பெண்கள் கடத்தப்படுவதுதான் அதிகம்.இவ்வாறு சாரதா ராமநாதன் கூறினார்.
Comments
Post a Comment