Wednesday,March,21,2012
கார்த்தி நடிக்கும் படத்தில் ஸ்டன்ட் காட்சியில் சொதப்பியதால் வில்லன் நடிகர் சலீம் கவுஸ் நீக்கப்பட்டார்.கார்த்தி, பிரணிதா நடிக்கும் படம் ‘சகுனி. இப்படத்தை சங்கர் தயாள் இயக்குகிறார். இப்படத்திற்காக கார்த்தி, வில்லன் சலீம் கவுஸ் நடிக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. சமீபத்தில் அக்காட்சிகளின் டபுள் பாசிடிவை தயாரிப்பாளர் திரை யிட்டு பார்த்தார். அதில் சலீம் கவுஸ் ஸ்டன்ட் காட்சிகளில் சொதப்பி இருந்தது தெரிந்தது. கார்த்தி குத்து விடும் காட்சிகளும் பொருத்தமாக இல்லை. இதையடுத்து அக்காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படமாக்க முடிவு செய்தார். அதே நேரம் சலீம் கவுஸுக்கு பதிலாக வேறு வில்லன் நடிகரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரிடம் 10 நாள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளது. இதற்கு பெரிய தொகை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. கார்த்தி, பிரகாஷ்ராஜ் மோதும் சண்டை காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட இருந்த இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம்தான் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Comments
Post a Comment