கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு: இந்தி நடிகை அனுஷ்காவுடன் சுரேஷ் ரெய்னா காதல்!!!

Wednesday,March,21,2012
கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. அந்த வகையில் நடிகைகளை திருமணம் செய்துகொண்ட வீரர்களும் உண்டு.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவும் தற்போது காதல் வலையில் சிக்கியுள்ளார். இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், அவருக்கு காதல் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்திலும், பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து வருகிறார்கள். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

அப்போது லண்டன் நகரில் ரெய்னாவும், அனுஷ்காவும் ஒன்றாக ஊர் சுற்றி திரிந்தார்கள். அனுஷ்கா படப்பிடிப்பை ரத்து செய்து ரெய்னாவுடன் சுற்றியுள்ளார்.

ரெய்னாவுடன் அனுஷ்காவுக்கு காதல் இருப்பதை அவரது மானேஜர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அனுஷ்காவின் மேலாளர் கூறும்போது, இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் அவ்வளவுதான். மற்றபடி இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

23 வயதான அனுஷ்கா சர்மா பெங்களூரில் பிறந்தவர். தற்போது அவர்களது குடும்பத்தினர் உத்தரகாண்டில் வசித்து வருகின்றனர். 2008-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் ரப் நே பனாதி ஜோடி என்ற இந்திப் படம் மூலம் அறிமுகம் ஆனார். 2010-ம் ஆண்டு அவர் நடித்து வெளியான பேண்ட் பாஜா பாரத் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Comments