ஒருதலை காதலால் ஏமாந்தது போதும் சிம்பு பரபரப்பு பேட்டி!!!

Monday, March 19, 2012
ஒருதலையாக காதலித்து ஏமாந்தது போதும். அடுத்த வருடம் எனது திருமணம் நடக்கும். அதற்காக வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்றார் சிம்பு.
இது பற்றி அவர் கூறியதாவது:
எனக்கு பொருத்தமான பெண்ணை சீக்கிரம் தேர்வு செய்வேன். அடுத்த வருடம் எனது திருமணம் நடக்கும். ‘நீ எந்த பெண்ணையாவது தேர்வு செய்திருக்கிறாயா? இல்லாவிட்டால் நானே பெண் பார்க்கட்டுமா? என்று அம்மா கேட்கிறார். இதுவரை யாரையும் நான் தேர்வு செய்யவில்லை. அப்படி தேர்வு செய்யும் பெண் மிக அழகாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு அழகான குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. எனவே வீட்டில் அழகான பெண்ணை தேடுகிறார்கள்.

நடிகை யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. கடந்த 6 வருடத்துக்கு முன் ஒருவருடன் உறவு இருந்தது உண்மை. 2009ம் ஆண்டில் காதலில் விழுந்தேன். அது ஒருதலை காதலாக முடிந்துவிட் டது. இதனால் ஏமாற்றம் அடைந்தேன். உலகம் முழுவதும் சுற்றி எல்லாவற்றையும் அனுப வித்துவிட்டேன். நான் எதையும் இழக்கவில்லை ஆனால்
திருமணம் என்றதும் பயமாக இருக்கிறது. எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். மனைவி, குழந்தைகள், குடும்பம் என வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வேன்.

Comments