ரொமாண்டிக் மூடில் செல்வராகவன்!!!

Wednesday,March,21,2012
செல்வராகவன் தன் படங்களில் கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாடல்களுக்கும் கொடுப்பவர். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடலாசிரியராகவும், 'மயக்கம் என்ன' படத்தில் பாடியும் பாடல்களில் தன் சிறிய பங்களிப்பை பதிவு செய்தார். யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் இணைந்த படங்களிலும் சரி, ஜீ.வி. பிரகாஷ் உடன் இணைந்த படங்களிலும் சரி, படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்போது முதன் முறையாக, 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்துள்ளார் செல்வராகவன். வைரமுத்து எழுதி, கார்த்திக் பாடிய பாடலின் ஒலிப்பதிவு முடிந்துள்ளது. இந்த ரொமாண்டிக் பாடல் செல்வராகவனை கவர்ந்துள்ளதாம். இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் செல்வராகவன். பாத்து சார்... அப்டியே மெய்மறந்து அடுத்த உலகத்துக்கு போயிடாதீங்க.....

Comments