இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுவது உறுதி!!!

Monday, March 19, 2012
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார். கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை இசைப்புயல் விரும்பி கேட்டாராம், 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்க போகும் பரத் பாலா இந்த ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஒப்புக் கொண்டாராம். முதலில் உலக நாயகன் கமலஹாசனை பாட வைக்க திட்டமிட்டு இருந்த ரகுமான், கமல் 'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம் ரகுமான். 'இசைப்புயலின் தீவிர ரசிகனாகிய எனக்கு அவருடைய இசையில் அதுவும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் பாட இருப்பது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்' என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

Comments