ஒரே இசை ஆல்பத்தில் விக்ரம், சாய்னா, ஸ்ரீசாந்த்!!!

Sunday, March 18, 2012
ஒரே இசை ஆல்பத்தில் விக்ரம், அசின், சாய்னா, ஸ்ரீசாந்த் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பாடுகிறார்கள்.வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருவை மையமாக வைத்து ஒன் என்ற பெயரில் இசை ஆல்பம் உருவாகிறது. பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான ஜார்ஜ் பீட்டர் இதை உருவாக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:இந்தியாவில் பல்வேறு மொழியினர் இருந்தாலும் இந்தியன் என்ற ஒரு சொல்லில் இணைந்திருக்கின்றனர். நாட்டுபற்று, சகோதரத்துவம் போன்றவற்றை உறுதிபடுத்தும் வகையில் இந்த இசை ஆல்பம் உருவாகிறது. இதில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இணைந்து பாடுகின்றனர். விக்ரம், மம்மூட்டி, சுதீப், மோகன்லால், சுரேஷ்கோபி, விவேக் ஓபராய், ஜாயித் கான், அசின், கார்த்திகா, லட்சுமிராய், மம்தா, பாவனா, விளையாட்டு துறையை சேர்ந்த சாய்னா, ஸ்ரீசாந்த், இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களான பிளாசே, சுவேதா, மோகன், சங்கர் மகாதேவன், வசுந்த்ரா தாஸ், சித்ரா, உஷா உதூப், உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், ஜேசுதாஸ், விக்கு வினயாக்ராம், ஸ்டீபன் வேசே உள்ளிட்ட பலர் இதில் இணைகின்றனர். இவ்வாறு ஜார்ஜ் பீட்டர் கூறினார். இதன் புரமோஷனல் கிளிப்பிங்ஸ் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.

Comments