Thursday, March 15, 2012
இங்கிலாந்து நடிகை, மாடல் அழகி ரோசி ஹன்டிங்டன் ஒயிட்லி (24). பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்பே மாடலிங் தொழிலுக்கு வந்தவர். உள்ளாடை தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற விக்டோரியாஸ் சீக்ரட் நிறுவனம், ஆடைகள், சென்ட் தயாரிக்கும் பர்பரி நிறுவனம் ஆகியவற்றில் இவர்தான் நம்பர் ஒன் மாடல் அழகி. சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ‘டிரான்ஸ்பார்மர்கள்’ என்ற வரிசையில் ஹாலிவுட் படங்கள் 2007-ம் ஆண்டு முதல் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையின் 3-வது படமான ‘டார்க் ஆப் த மூன்’ கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியானது.
பிரான்சை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வெளிவரும் ‘எல்லீ’ பேஷன் இதழ் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. இதில் இந்த ஆண்டின் சூப்பர் மாடல் அழகியாக ரோசியை நேயர்கள், ரசிகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வெளிவரும் எப்.எச்.எம். இதழ் ‘கவர்ச்சியான பெண் யார்’ என்று போட்டி நடத்தியது. இதில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று நம்பர் ஒன் அழகியாக ரோசி தேர்வாகியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள நடிகைகள், மாடல் அழகிகளை அலசி ஆராய்ந்து ‘ஹாட் அழகிகள்’ என்ற பட்டியலை மேக்சிம் இதழ் வெளியிட்டுள்ளது. அதிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் ரோசி. "என் உதடுகள் பெரிதாக இருக்கும். படிக்கும் காலத்தில் இதை சொல்லி தோழிகள் கிண்டல் செய்வார்கள். அதுதான் எனக்கு தற்போது அழகி பட்டத்தை பெற்று தந்திருக்கிறது" என்கிறார் ரோசி

Comments
Post a Comment