
இந்தியிலிருந்து காப்பி அடித்த படத்தில் நடித்ததாக பாவனா நடித்த படம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘நோ என்ட்ரிÕ. சல்மான் கான், அனீல் கபூர், பிபாஷா பாசு, லாரா தத்தா, செலினா ஜெட்லி நடித்த படம். இப்படத்தை மலையாளத்தில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ என்ற பெயரில் காப்பி அடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஜெயராம், ஜெயசூர்யா, பாவனா, சம்விருதா, ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். Ôநோ என்ட்ரிÕ கதைப்படி சல்மான், அனீல்கபூர் இருவரும் திருமணம் ஆனவர்கள். பிபாஷா பாசு கால்கேர்ள். அவரை தேடி போகின்றனர். இதனால் இருவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறது படம். இதே பாணியில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படம் பற்றி மும்பை தயாரிப்பாளருக்கு தகவல் போனது. இதையடுத்து அவர் தன் படத்தை அனுமதி இல்லாமல் காப்பி அடித்ததாக மலையாள தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதுபற்றி மலையாள தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘எந்த படத்தையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. தமிழில் வெளியான Ôசார்லி சாப்ளின்Õ படத்தை பார்த்த பாதிப்பில் இக்கதை உருவானதுÕ என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் Ôஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ படக் குழு, கோவாவில் ஷூட்டிங் நடத்தி வருகிறது.
Comments
Post a Comment