பெப்ஸி தொழிலாளர்களை கண்டித்து படப்பிடிப்பு ரத்து!!!

Saturday, March 17, 2012
தயாரிப்பாளர்கள் வருகிற 19ந் தேதி ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்து உள்ளனர்.இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் அமீர் மீது சங்க விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கமும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் எந்த ஒத்துழைப்பும் தராது என்று, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் அராஜகப்போக்கால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவரும் 19.03.2012 திங்களன்று எல்லா அ தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ரத்து செய்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றுமையை நிலை நாட்டுவது மேலும் அன்று காலை 11- மணிக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.தங்கள் செய்கைக்கு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வருத்தம் தெரிவிக்கும் வரை ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைகளின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்து கொள்ளாது. மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments