ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத் விரைவில் புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு!!!

Saturday, March 10, 2012
சென்னை::ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத் விரைவில் புதிய இயக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளார். ரசிகர்களால் ‘தல’ என்று பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறார் அஜீத். கடந்த பிறந்த தினத்தின்போது தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் தொடர் ந்து மன்றங்களை நடத்தி வந்தனர். மன்றங்களை கலைத்தபிறகு ரிலீஸ் ஆன ‘மங்காத்தா’ படம் வெற்றிகரமாக ஓடியது. இதற்கிடையில் மன்றங்கள் மூலம் ஏழை மாணவ, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தொடர்ந்து வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அஜீத்திடம் உதவிகேட்டு அடிக்கடி ரசிகர் மன்றங்கள் சார்பில் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர். உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அஜீத் எண்ணி உள்ளாராம். அதற்காக அரசியல் தொடர்பில்லாத ஒரு இயக்கத்தை தொடங்க அஜீத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும், அப்போது அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ‘பில்லா 2’ படத்தில் அஜீத் பிஸியாக இருப்பதால் அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Comments