
யாரையும் மதிக்கிறதில்லை, படத்தின் புரமோஷனுக்கு வருவதில்லை, சம்பளத்தை கண்டபடி உயர்த்திவிட்டார், கால்ஷீட் சொதப்புகிறார் என்று அமலா பால் மீது அடுக்கடுக்காக புகார்கள். இருந்தாலும் இவரைத்தான் விரும்பி படத்தில் உப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பார்கள். வடி கொடுத்து அடி வாங்க அப்படியென்ன ஆர்வமோ.
தமிழக டிவி சேனல்களையும், பத்திரிகைகளையும் மட்டமாக நடத்திய இவரைதான் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் பூலோகம் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனரின் இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.
அமலா பாலினால் பூலோகத்தில் பூகம்பம் வெடிக்காமல் இருந்தால் சரிதான்.
Comments
Post a Comment