
ஆதிபகவான் இழுத்துக் கொண்டே போகும் சோகத்தை தாடிக்குள் மறைத்தபடி பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜெயம் ரவி. ஆதிபகவான் முடிந்தால்தான் தாடியை எடுத்து தடாலடியாக நாலு படங்களில் நடிக்க முடியும்.
ஆதிபகவான் தவிர்த்து பூலோகம் என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்திலும் இவர்தான் ஹீரோ.
தற்போது தமிழ் விளம்பர உலகை சகோதர நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் குத்தகை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக பொருட்களை வாங்கச் சொல்லி ஜெயம் ரவியும் வற்புறுத்தப் போகிறார். ஆமாம், இவரும் விளம்பரப் படங்களில் நடிக்கயிருக்கிறார்.
அப்படியே ஒரு கேம் ஷோவிலும் தலைகாட்டுங்க பாஸ்... அதையும் ஏன் விட்டு வைக்கணும்.
Comments
Post a Comment