கோடம்பாக்கம் கோடங்கி!!!

Monday, March 19, 2012
பட்டண படம் எடுத்த விஜயமான இயக்கம், ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டு துணை நடிகர்கள் செலக்ஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்... கூட இருக்கிற உதவியாளருங்க பார்டிலேயும், பங்ஷன்லேயும் ஆளுங்கள பிடிச்சி, இந்த நாள்ல இந்த ஓட்டல¢ ரூமுக்கு போனா இயக்குனர் இன்டர்வியூ நடத்துவாரு. செலக்ஷன் ஆயிட்டா நீங்க நடிக்க வந்துடலாம்னு ஆளுங்கள அனுப்பி வைக்க¤றாங்களாம்... வைக்கறாங்களாம்... ஸ்டோரி டிஸ்கர்ஷனோடு சேர்த்து நடிகர்களை தேர்வு பண்ணினா, செலவு மிச்சமாகும்னுதான் இந்த ஐடியாவாம்... ஐடியாவாம்...

லவ் இயக்கம் தான் இயக்குற வழக்கு படத்தோட விழால பேசறப்போ 2 ஹீரோயின்ல ஒரு ஹீரோயின் பேரை மட்டும் மாத்தி சொல்லிட்டாராம். தன்னோட பேரை மாத்தி சொல்லிட்டாரேன்னு ஊர்மியான புதுமுகம், தவியா தவிச்சாராம்... தவிச்சாராம்... எப்படியும் தன்னோட பேரை மறுபடியும் சொல்வாருன்னு எதிர்பாத்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். இதை பார்த்த ‘ஹன்ட்Õ பட இயக்கம் மைக் முன்னால வந்து விட்டுப்போன நடிகையோட பேரை சொல்லியும் அவரை பாராட்டியும் குளிர வச்சாராம்... குளிர வச்சாராம்...

4 ஜோடி புதுமுகங்களை வெச்சி நா பேர்ல தொடங்குற கல்லூரி கதையை படமாக்கின தயாரிப்பு, படத்தை முடிக்க¤றதுக்காக வீட்டை வித்தாராம்... வித்தாராம்... படாத பாடுபட்டு படத்தை ரிலீஸ் பண்ணப்ப படம் நல்லாயிருக்குன்னு டாக் மட்டும் வந்துச்சாம். டப்பு வரலையாம்... வரலையாம்... இப்போ போட்ட முதல் போச்சேன்னு பங்க்காகி கிடக்க¤றாராம்... கிடக்க¤றாராம்...

Comments