
சென்னை;;இளையராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பாவலர் க்ரியேஷன்ஸ் கோழிகூவுது, அலைகள் ஓய்வதில்லை, கொக்கரக்கோ போன்ற படங்களை தயாரித்துள்ளது. பாவலர் கிரியேஷன்ஸின் பல படங்கள் வெள்ளி விழா கண்டன. பல நாட்களுக்கு பிறகு பாவலர் க்ரியேஷனஸ் தயாரிப்பில் இறங்குகிறது.
பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் கௌதம் வாசுதேவ் மேனனின் படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கௌதம் வாசுதேவ் மேனனின் படத்திற்கு இளையராஜா முதல்முறையாக இசையமைக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டு இப்போது தான் தணிந்தது.
பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார். பாவலர் க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் படத்தை இயக்கினால் இளையராஜாவும் கௌதம் மேனனும் மற்றொரு முறை இணைவது உறுதி.
சென்ற ஆண்டு சில படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றி வருகிறார்.
நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் 30நொடி முன்னோட்டத்தில் ராஜா ராஜா தான் என்ற தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இளையராஜா.
மீண்டும் ராஜாவின் ராஜாங்கம்!
Comments
Post a Comment