Wednesday,March,21,2012
ராஜா போக்கிரி ராஜா என்ற படத்தை வெளியிட தடை கோரி புகார் கொடுத்திருந்த ஸ்ரேயா இப்போது, அந்தப் புகார் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மம்முட்டி, ப்ருத்வி நடித்த போக்கிரி ராஜா என்ற மலையாளப் படம் தமிழில் ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. மலேஷியா பாண்டியன் என்பவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்தார் நடிகை ஸ்ரேயா.
மலேஷியா பாண்டியன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன், ஸ்ரேயாவையும் அவரது தந்தையையும் நேரில் சந்தித்து, தனது நிலையை விளக்கினார். இதைத் தொடர்ந்து, புகார்களை வாபஸ் பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளார் ஸ்ரேயா.
என்னால் ஒரு தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்துக்குள்ளாவதை விரும்பவில்லை என்று கூறிய ஸ்ரேயா, உடனே வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், படத்தை வெளியிடும் வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியதாகவும் மலேசியா பாண்டியன் தெரிவித்தார்.

Comments
Post a Comment