முதல் முறையாக ஆர்யாவுக்கு டபுள் ரோல்!!!

Wednesday,March,07,2012
செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.

இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.

இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.

"இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்," என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான்.

இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம்.

Comments