நிர்வாண போஸூக்காக மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டேன்: காஜல்!!!

Friday, March 9, 2012
நிர்வாண போஸ் குறித்த செய்திகளை நினைத்து நான் கவலைப்பட மாட்டேன் அது ரொம்ப சில்லியான மேட்டர், என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். 'பொம்மலாட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஜல், அதனை முதலில் மறுத்து வந்தார். ஆரம்பத்தில் அது என்னுடைய படமே இல்லை; கிராபிக்ஸ் படம் என்று கூறி வந்த காஜல், இப்போது அந்த படத்திற்கு போஸ் கொடுத்தது நான்தான் ஆனால் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை, என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அந்த பத்திரிகை ஷூட்டில் எடுத்த படங்களை என்னிடம் காட்டிவிட்டு பப்ளிஷ் செய்யும்படி கூறியிருந்தேன். குறிப்பிட்ட அந்த படத்தில் நான் ஒரு பஸ்டியரை அணிந்திருந்தேன். அதை கிராப் செய்துவிட்டு போட்டோஷாப்பில் வொர்க் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதை பற்றி கவலைப்பட்டு மண்டையை உடைத்துக் கொள்ள மாட்டேன். இது ரொம்ப சில்லியான விஷயம். (ஆமாமா இதெல்லாம் இவுகளுக்கு சில்லியான மேட்டர்தான்) இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன், என்று கூறியுள்ளார்

Comments