
சென்ற முறை பெப்சி, படைப்பாளி பிரச்சனை வெடித்த போது பெப்சி தொழிலாளர்கள் அணியில் உறுதியாக இருந்தார் கமல்ஹாசன். பாலுமகேந்திரா போன்றவர்கள் எதிரணியில் இருந்த போதும் கமலின் நிலைப்பாடு பெப்சி ஆதரவாகவே இருந்தது. ஆனால் இன்று...?
ஒருவகையில் இப்போது நடக்கும் வேலை நிறுத்தம் தேவையில்லாதது. நூறு முதல் நூற்றைம்பது மடங்கு சம்பள உயர்வு கேட்டால் எப்படித் தர முடியும்? இதனால் பெப்சிக்கு படைப்பாளிகள் மத்தியில் ஆதரவு குறைவுதான். கமலும் இந்தமுறை கண்டு கொள்ளவில்லை.
பாதிக்கு மேற்பட்ட சங்கங்கள் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டதால் விஸ்வரூபம், பில்லா 2கும்கி போன்ற படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்படைந்துள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தப் படங்களின் படப்படிப்புகள் நடக்கின்றன. அதே நேரம் சிறு முதலீட்டுப் படங்களின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன.
பெரிய நடிகர்களின் கால்ஷீட்டை வீணடிப்பது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் போராட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
Comments
Post a Comment