Sunday, March 04, 2012
கமல் மகளும், நடிகையுமான ஸ்ருதி நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நெய்வேத்தியம் செய்தும் வழிபட்டார். கோவிலுக்குள் ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். கைகளை அசைத்து கூச்சலும் எழுப்பினார்கள். ஸ்ருதி அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். சாமி கும்பிடும் இடத்தில் ஆரவாரம் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். வழிபாடு முடிந்து வெளியே வந்து காரில் ஏறச் சென்ற போதும் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் கோவிலில் அமைதியை கடைபிடிக்கும்படி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அங்கிருந்து காளகஸ்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். காளகஸ்தி வந்து இறங்கிய ஸ்ருதியை கண்டதும் ரசிகர்கள் சுற்றி முற்றுகையிட்டார்கள். பக்தர்களும் முண்டியடித்து பார்த்தார்கள். அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி சைகையால் கேட்டுக் கொண்டு கோவிலுக்குள் சென்றார். அங்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டார். வழிபாடு முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சாந்தஸ்வரூபி.....!

Comments
Post a Comment