காட்சி ஒரிஜினலாக வர, ஒரிஜினல் சரக்கடித்த விக்ரம்!!!

Thursday, March 01, 2012
குடித்துவிட்டு வரும் காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக நிஜமாக சரக்கடித்து தன் 'தொழில்நேர்த்தி'யைக் காட்டியுள்ளார் நடிகர் விக்ரம்!

மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கும் மலையாளம், இந்தி, தமிழ்ப் படமான 'டேவிட்'டில் நடிக்கிறார் விக்ரம்.

இந்தக் கதையின் நாயகன் ஒரு பெரும் குடிகாரன். ஆலப்புழை பகுதியில் வசிக்கும் மீனவன்.

ஆலப்புழையிலும், கேரள மாவட்டத்தின் எல்லைப்புற ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தபோது, மீனவர் விக்ரம் விக்ரம் குடித்துவிட்டு வருவது போல அதிக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய விக்ரம், உண்மையாகவே சரக்கடித்துவிட்டு அந்த காட்சிகளை நடிக்கலாமே என இயக்குநரிடம் யோசனை சொன்னாராம் (கேரள க்ளைமேட் வேற இம்சை பண்ணியிருக்கும்!)

அதை ஏற்றுக் கொண்டு, உடனே நல்ல காஸ்ட்லி சரக்கு வரவழைத்து, கிர்ரடிக்கும் அளவுக்கு ஏற்றிக் கொண்டு, தன் ஒரிஜினல் நடிப்பைத் தந்தாராம்.

அட இது புது ரூட்டாயிருக்கே!

Comments