வில்லன், பாடல், காதல் இல்லாமல் 90 நிமிடம் ஓடும் படம்!!!

Saturday, March 24, 2012
வில்லன், பாடல், காதல் எதுவுமில்லாமல் 90 நிமிடம் ஓடும் படம் உருவாகி உள்ளது.‘போர்க்களம் என்ற படத்தை இயக்கியவர் பண்டி சரோஜ்குமார். இவர் இயக்கும் புதிய படம் அஸ்தமனம். இது பற்றி அவர் கூறியதாவது: ஹாலிவுட் படங்கள் 90 நிமிடங்களில் பரபரப்பாக உருவாக்கப்படுகிறது. அதுபோல் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்படத்தில் நிறைவேறி இருக்கிறது. அஸ்தமனம் படம் 90 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடும். இதில் பாடல் கிடையாது. காதல் கிடையாது. வில்லன் கிடையாது. காட்டுக்குள் ஜாலி பயணமாக டிரக்கிங் செல்லும் 6 பேர் வழிதவறி விடுகின்றனர். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அதிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா என்பதுதான் கதை.

இப்படத்தின் ஷூட்டிங் நடத்திவிட்டு பட குழுவினர் திரும்பும்போது இருட்டிவிட்டது. இதில் 1 கி.மீட்டர் தூரம் பாதை மாறி சென்றுவிட்டோம். அதன்பிறகுதான் வழிதவறி செல்கிறோம் என்பது தெரிந்தது. ஒரு வழியாக சரியான பாதையை கண்டுபிடித்து காட்டிலிருந்து வெளியில் வந்தோம். ராஜேஷ், சரண், கனகசபை, விக்டோரியா, வித்யா நடிக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா வனப்பகுதிகளில் 50 நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ராஜ்குமார் ஒளிப்பதிவு. சித்தார்த் இசை. எஸ்.சிவராஜசேகர் தயாரிப்பு.90 நிமிடம் ஓடும் படம்

Comments