
5 கதாநாயகிகளுடன் உருவாகும் “நிஜம் நிழலாகிறது” என்ற படத்தை செந்தில்நாதன் டைரக்ஷன் செய்கிறார்.
நகரில் நிஜத்தில் நடக்கும் கொலை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாகிவருகிறது. இதில் முக்கிய விஷயமாக 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மேலும் திகில் – மர்மம் கலந்த படமாக தயாராகிறது. புளோரா, மும்பை அழகி மீனாட்சி, காஜல், சான்ட்ரா ஆகிய நான்கு பேருடன் இன்னொரு பிரபல கதாநாயாகியும் நடிக்கவிருக்கிறார்.
ஹீரோவாக அறிமுகமாகும் அருள்ராஜ், படத்தின் இசைப் பணியையும் பார்க்கிறார். சித்ரா லட்சுமணன், பஞ்சு சுப்பு, ஜெகன், சசிகுமார் ஆகிய 4 பேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி. கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிறார் செந்தில்நாதன்.
படப்பிடிப்பு வருகிற 26-ந் தேதி ஊட்டியில் தொடங்குகிறது. பாடல் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment