
இயக்குநர் ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. டிரெய்லரில் உதயநிதி - சந்தானம் கூட்டணியின் காமெடி காக்டெய்லால் இளைஞர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரிய நாயகர்களின் படத்தினை போலவே 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கும் சுமார் 450 பிரிண்ட்கள் போடப்படுகிறது. "அனைத்துக்கும் காரணம் இயக்குநர் ராஜேஷ் தான். ரொமான்டிக் காமெடி படங்களில் அவர் மன்னன். சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு, சமீபகாலங்களில் இது போன்ற காமெடி படத்தினை பார்த்தது இல்லை என்று பாராட்டி, 'யு' சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்க விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. நனைஞ்சா... துவட்டியும் விடுவீங்களா பாஸ்?
Comments
Post a Comment