400கோடி பட்ஜெட்! ஜாக்கிசானுடன் கமலா? சூர்யாவா?.!!!

Sunday, March 25, 2012
பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர் போனவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல் நடித்த தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தன்னைப் பற்றி நிரூபித்தவர் ரவிச்சந்திரன்.

ஜாக்கி சான் நடித்த பெரும்பாலான படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டதன் மூலம் ஜாக்கியின் நண்பரானவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்த நல்ல நட்பின் மூலமே தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கி சான் வந்தார்.

தற்போது ரவிச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்ப்து ஜாக்கி சான் நடித்த 'ஆர்மர் ஆப் காட் -ll' படத்தை தமிழில் எடுக்கும் முயற்சியில் தான். இந்த படத்தில் ஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போல் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்கிசான் ரசிகர்களோடு சேர்த்து மற்றவர்களையும் கவர்வதற்காக இந்தி மற்றும் தமிழ் ஹீரோக்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்தியில் சல்மான்கானிடம் பேசப்பட்டு வருகிறது. ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பதால் பெரும்பாலும் சல்மான்கான் ஒப்புக்கொள்வார் என்றே சொல்கிறார்கள்.

தமிழ் ஹீரோக்களில் ரவிசந்திரனுக்கு கமலுடன் நல்ல நட்பு இருப்பதாலும், இந்த வருடம் ரவிச்சந்திரனுக்கு கமல் கால்ஷீட் கொடுப்பதாக கூறியிருப்பதாலும் கமல் தான் நடிப்பார் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் தரப்பிலிருந்து சூர்யாவிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு நடப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 400கோடி ரூபாய் தானாம்.

Comments