'3' படம் எப்படி? 3 படத்தை இன்டர் நெட்டில் வெளியிட தடை!!!

Friday, March,30, 2012
கொலைவெறி புகழ் 3 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் என்று சொல்வதைவிட, தமிழகத்தில்தான் இன்று வெளியானது. உலகின் மற்ற நாடுகளில் நேற்றே ரிலீஸ்!

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள முதல்படம், உச்சரிக்காத உதடுகளே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான கொலை வெறிப் பாட்டு இடம்பெற்றுள்ள படம்... ரஜினி, கமல் என பிரபலங்கள் பார்த்துப் பாராட்டிய படம் என்பதால், ஏக எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

தனுஷ் - ஸ்ருதிஹாஸன், சிவ கார்த்திகேயன், சுந்தர் ராமு ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. யு சான்றிதழ் பெற்றுள்ளது சென்சாரில்.

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், புற நகரில் 20 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

அனைத்து அரங்குகளுமே கிட்டத்தட்ட ஹவுஸ் புல். ஒரு மீடியம் பட்ஜெட் படத்துக்கு இந்த அளவு ஓபனிங் என்பது மிகப் பெரிய விஷயம். கண்டிப்பாக அடுத்த மூன்று நாட்களில் படத்தின் முதலீடு தேறிவிடும்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. சிலர் துள்ளுவதோ இளமை மாதிரி இருப்பதாகவும், இன்னும் சிலர் மயக்கம் என்ன பாதிப்பு தெரிவதாகவும் கூறியுள்ளனர்.

நம்முடைய விமர்சனம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரவிருக்கிறது... அதுவரை, படம் குறித்த உங்கள் கருத்தைச் சொல்லுங்க!

3 படத்தை இன்டர் நெட்டில் வெளியிட தடை!!!

தனுஷ்​ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ள '3' படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் பிரபலமானதே இணையதளங்களால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் நாளை ரிலீசாகிறது. இந்த நிலையில் கஸ்தூரி ராஜா சென்னை உயர்திமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் இணைய தளங்களில் '3' படத்தை வெளியிட தடை கோரியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனுஷ் நடித்த '3' படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ரசிகர் மத்தியில் இப்படத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. '3' படம் ரிலீசாவதற்கு முன்பே அப்படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. சமீபகாலமாக புதுப் படங்களை திருடி இணைய தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதுபோல் '3' படத்தையும் இணைய தளங்களில் வெளியிடலாம் என அஞ்சுகிறேன். இதனால் பெரிய இழப்பு ஏற்படும்.

எனவே '3' படத்தை இணைய தளங்களில் பதிவு இறக்கம் மற்றும் பதிவு ஏற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். டி.வி.டி., வி.சி.டி.யில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும், என்றார்.

இந்த வழக்கை திபதி கே.பி.கே. வாசுகி விசாரித்தார். '3' படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து திபதி உத்தரவு பிறப்பித்தார்.

Comments