தனுஷின் '3' படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை - ஆந்திராவில் சாதனை!!!

Sunday, March 18, 2012
தனுஷே எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கொலை வெறி' பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.

கொலை வெறி பாடல், `3' படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.

ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3' படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments