
அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பில்லா - 2'. சக்ரி டோலோட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பாடல் வெளியீடு ஏப்ரல் 15 - 25-க்கும் இடைப்பட்ட தேதிகளில் இருக்கும். தேதி மற்றும் இடம் இன்னும் முடிவாகவில்லை. மே மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். இந்நிலையில், 'பில்லா 2' படத்தில் அஜித் இலங்கை அகதியாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தில் இலங்கையில் பிறந்த தமிழராக நடித்து இருக்கிறார் அஜித். படத்தில் அவர் இலங்கை அகதியாக நடிக்கவில்லையாம். டேவிட் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதை ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் காக்டெயிலாக கலந்து இருக்கிறார் சக்ரி டோலோட்டி. 'பில்லா 2' படத்தின் டிவி உரிமைகள் அனைத்தையும் சன் டிவி பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. போகிற போக்க பார்த்தா 'மங்காத்தா'வெல்லாம் தூக்கி சாப்ட்ருவாரு போலயே......
Comments
Post a Comment