Saturday, March 3, 2012
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் ‘பில்லா 2’. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து ‘பில்லா 2’ உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தென்ஆப்ரிக்கா, நைஜீரியாவில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஹரி.

Comments
Post a Comment